தமிழ் பதிப்பு : நிர்ப்பந்தப் பணி மற்றும் நியாயமான ஆட்சேர்ப்பு பற்றிய அறிக்கையிடல் : இலங்கை ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் கையேடு

இக் கையேடானது நிர்ப்பந்தப் பணி மற்றும் நியாயமான ஆட்சேர்ப்பு பற்றி அறிக்கையிடுவதற்கு உதவும் முகமாக இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்களுக்காக உருவாக்கப்பட்டது. இது சர்வதேச ஊடகவியலாளர்களின் சம்மேளனம் மற்றும் இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் என்பவற்றினால் உருவாக்கப்பட்டதாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் கீழ் ஆட்சேர்ப்புச் செயற்பாட்டின் போது இடம்பெறும் மனித மற்றும் தொழிலாளர் உரிமை மீறல்களைக் குறைத்தல் எனும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் புலம்பெயர் தொழிலாளர் ஆட்சேர்ப்புக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான உலகளாவிய நடவடிக்கை எனும் மூன்றாண்டு செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாகவே இக் கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது தொழிலாளர் புலம்பெயர்வு பற்றிய விடயங்களில் ஊடகங்களின் செயற்பாட்டு எல்லையை மேம்படுத்துதல், நியாயமான ஆட்சேர்ப்புப் பற்றிய நம்பகமான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை அதிகரித்தல் மற்றும் அவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் தொழிலாளர் புலம்பெயர்வு பற்றிய மிகவும் சீரான விளக்கத்தை வழங்குதல் என்பவற்றில் ஈடுபாடு கொண்டுள்ளது.